நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வல்லகுண்டாபுரம் கிராமத்தில் கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்தான் கவுண்டமணி. இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் தான், திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். […]

நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்கதா’ பாடல் உருவான விதத்தை பகிர்ந்து, அமோக வரவேற்பு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடன இயக்குநர் ஜானி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஓடிடி […]

ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ’தாதா சாகேப் பால்கே விருது’ கருதப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருதினை […]

’ஷாருக்கானுக்கு எந்த மாதிரி கதாபாத்திரம் செட் ஆகும் என்ற யோசனை வந்ததும் நானே அவரிடம் சென்று கேட்பேன்’ என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரொமோஷன் பணிக்காக பான் இந்தியா முழுவதும் படக்குழு சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கிறது. அப்போது, பொன்னியின் செல்வன் படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்தும், வரலாற்று நினைவலைகள் குறித்தும் நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பாலிவுட்டின் பிங்க்வில்லா ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் […]

ஜெய்பூரில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றார்.. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர். இவரது 20 வயது மகள் ரக்சயா . கல்லூரிப்படிப்பை முடித்துள்ள நிலையில் சிறு வயதில் இருந்தே அழகிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார். குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் பகுதி நேர வேலையை செய்து அழகிப்போட்டிக்கு தன்னை […]

90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர்.. பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா, சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.. சுகன்யா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, சின்னக் கவுண்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான்.. அந்த படத்தில் சுகன்யாவின் […]

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், திடீரென முன்னணி இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்றிரவு திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரோடு பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், செல்வராகவன், அவரது குடும்பத்தினர் மற்றும் தனுஷ் ஆகியோரின் தந்தை […]

நடிகை பாவனா அணிந்திருந்த உடை, சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது. தன் மீது எழுந்த இந்த […]

’செவ்வந்தி’ சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், திருமணத்தை மறைத்து கர்ப்பமானதை அறிவித்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ’செவ்வந்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. நாயகன் தனது முன்னாள் காதலிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை மனைவிக்கு தெரியாமல் வளர்க்கும் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையே, தங்கையின் திருமணம், தம்பி மனைவியின் சூழ்ச்சி என விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதில், நாயகியாக […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக […]