பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு […]

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே […]

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாள் சரண்டர் விடுப்பிற்கு பணம் பெறுவது தொடர்பாக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வருடாந்திர விடுமுறையை சரண்டர் செய்து பணமாக மாற்றும் முறை மீண்டும் 01.10.2025 முதல் அமல்படுத்தப்படும். அதன்படி வருடத்திற்கு 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் நடைமுறை தொடரும். 2020 […]

நவீன மாடுகள் காப்பகங்களை பராமரிக்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரிடம் விருப்பக் கடிதம் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22,875 மாடுகள், அவற்றின் உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் பொது சுகாதார சீர்கேடு […]

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது. நபார்டு நிதி மூலம் நடைபெற்ற நகராட்சி நிர்வாக பணிகளுக்கும் லஞ்சப்பணம் கைமாறியுள்ளது. […]