திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் […]

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பிடெக் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த […]

2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் […]

திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யக்கோரிய வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை, ரிலீசான நாளிலேயே சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் செய்து வீடியோ போடுவது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த விமர்சனங்கள், ரசிகர்களை திரையரங்குக்கு வரமுடியாமல் தடுக்கின்றன எனவும், இதில் சிலர் பணம் வாங்கி நல்ல விமர்சனம் செய்கிறார்கள்; சிலர் பணம் தரவில்லையென பொய்யான விமர்சனம் செய்கிறார்கள் எனவும் தயாரிப்பாளர்கள் புகார் […]

சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]

விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம். உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் […]

இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் […]

1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயின்று வரும் நபர்கள் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் […]

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் […]