fbpx

மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்னைக்கு மதுரையில் இருந்து புறப்படும் அதிவேக ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இதேபோல சுதந்திர தின நன்னாளில் குறுகிய இருப்பு பாதையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது மதுரையில் இருந்து …

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான …

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது..

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான …

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி ஊழியர்களுக்கு குளிர்பானத்தில் …

சுதந்திர தினமான இன்று எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சுதந்திர தினத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி …

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளிட்ட செய்தி குறிப்பில் இன்று முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 …

தமிழகம் முழுவதும் இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். காலை 11 மணி அளவில் கூட்டத்தில் ஊராட்சிகளின் 2022-23-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில …

தமிழக நிதியமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் …

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ்நாடு …

கடன் சுமையால் கேரள பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால், கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவைக்கான …