பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.. […]

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “ அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர் கனவு நிறைவேறும்.. கழகப் பொதுச் செயலாளர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதி.. இது தான் கழகத்தின் சட்டவிதி.. இந்த சட்டவிதியை […]

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது..  நடிகராக மக்களின் பேரன்பை பெற்ற எம்ஜிஆர், அரசியலில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர்.. புரட்சி தலைவர் என்ற பெயர் பெற்ற எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை வழங்குவோம் என்று இன்றும் பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை அதிமுக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. மேலும் அவரின் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள திருத்தங்களை சீர் செய்யவும், முறைப்படி பெயர் மாற்றம் செய்யவும் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இங்கே விரிவாக காண்போம். […]

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களின் வசதிக்காக, ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அசல் அட்டை தொலைந்தாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ, பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியமின்றி தங்கள் கைபேசி அல்லது கணினி மூலமாகவே மின்னணு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகளை தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. முதலில், தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் […]

சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு விவகாரம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பேசிய அவர், நிர்வாகச் சீர்கேடுகளால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, “தமிழகத்திற்கு என ஒரு நிரந்தர டிஜிபி (DGP) கூட நியமிக்கப்படாத நிலையில், காவல்துறை நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது” என்று குறிப்பிட்டர். மேலும், முதல்வர் […]

தமிழக குடும்பங்களின் பொங்கல் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் வகையில், தமிழக அரசு ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகை அறிவித்தது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்புடன் கூடிய நிதி உதவி சுமார் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. . கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நாளொன்றுக்கு […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் அதிமுகவுக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வாசு, திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2010 வரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக […]