தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், பொறியியல், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழலியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு ‘தமிழக அறிவியலறிஞர் விருது’ வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டயம், சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநிலமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; […]

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அவளது கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் என்பதை நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்துவது, சட்டரீதியாக தவறு மட்டுமல்ல, சமூகநீதி மீதான புறக்கணிப்பும் கூட. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர் […]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை […]

பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்ட, தூய்மை பணியாளர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு களித்து வருகின்றனர் அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள சென்னை பெருநகர […]

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை […]

இந்தியாவிலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சன் டிவி குழுமம் திகழ்கிறது. 1993-ம் ஆண்டு முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ரூ.24,000 கோடி மதிப்பு கொண்ட மிகப்பெரிய மீடியா குழுமமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சன் டிவியின் அதிபரான கலாநிதி மாறனுக்கும் அவரின் சகோதரரும் எம்.பியுமான தயாநிதி மாறனுக்கு இருக்கும் மனக்கசப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை வாங்கிவிட்டதாக […]

சிவகங்கை மாவட்டத்தின் மறவமங்கலம் அருகேயுள்ள பொத்தகுடி கிராமம், இன்று தமிழகம் முழுக்க மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. காரணம்.. சிட்டுக்குருவியை காக்கும் கிராமமக்களின் தீர்மானம். பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு குருவி ஒன்று கூடு […]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]