பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் 1970கள் மற்றும் 80களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். இவர், தனது திறமையான இசையால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் […]

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கூ டூப் குக்கூ’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அண்மையில்தான் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது எலிமினேஷன் நிகழ்ச்சி மிகவும் நகைச்சுவையாக இருந்ததால், அந்த வீடியோ சமூக […]

பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “அன்பு கரங்கள்” என்ற சிறப்பு திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர்களுக்கு கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

சென்னை ராயப்பேட்டையில் தெருநாய் கடித்து தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தடுப்பூசி போட்ட பின்னரும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா..? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து அவசரகால சிகிச்சை சிறப்பு மருத்துவர் சையது ஹாரிஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு மிக […]

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி மீனா, 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில் சிவக்குமாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. […]

வருமான வரி தாக்கல் செய்வதற்கான (ITR) காலக்கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் காலக்கெடு முடிந்தது. தணிக்கைக்கு உட்படாத தனிநபர் வரி செலுத்துவோருக்கான காலக்கெடு முன்னதாக ஜூலை 31 ஆக இருந்தது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்தக் காலக்கெடு செப்.15 ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் புகார் எழுந்ததால் இந்த கெடு செப்.16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த காலக்கெடு […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]