சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது […]

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் […]

திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜன் மகளிர் இலவச பேருந்தை பெண்களின் ஓசி பஸ் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் […]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி […]

விருதுநகர், காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து […]

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிமுறைகள் கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள […]

சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]