கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். இதில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எந்த வேலையுமே செய்யாமல், கடந்த 4 ஆண்டுகளாக திமுக தனது ஆட்சியை ஓட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவே […]

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, இன்று முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை […]

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி […]

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]

அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளரான நியமிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வியூகம் தீட்டும் வேலைகள் முழுசாக துவங்கிவிட்டன. இதன் தொடக்கமாக, மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் நடைபெறும் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூட்டத்தில் […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. “எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு […]

தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே ஒசூரில் ரூ.500 கோடியில் ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி தொடங்கி 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து அதன் திறப்பு […]

மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு […]