தூய்மை தமிழ்நாடு நிறுவனம் அனைத்து கழிவு பொருட்களையும் சேகரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு அங்கீகரிப்பதற்காக தகுதி உடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினம்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, […]
என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் 42 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண். இவர், சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த ஓராண்டுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தோம். திடீரென ஒருநாள் என் மீது சந்தேகம் ஏற்பட்டு, இரவு நேரங்களில் நீ யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்றும் […]
கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறையும், காவல்துறையும் தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையே காதலிக்கு சில இளைஞர்கள் கர்ப்பமாக்கி போக்சோ வழக்கில் சிக்கியுள்ளனர். அதேபோல், பள்ளி – கல்லூரிகளிலும் படிக்கும் மாணவிகளை […]
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கின்றனர். அஜித் குமார், சினிமா மட்டுமின்றி, கார் பந்தயங்களிலும் பங்கு பெற்று வெற்றி பெற்று வருகிறார். இவர், ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்றுள்ள கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற […]
சென்னையில் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமலா. இவருடன் மகள் சாந்தி, மருமகன் மூர்த்தி மற்றும் அவர்களது மகன்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கமலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் சாந்தி துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் பயன்படுத்தியுள்ளார். சில நேரம் கழித்து, வாஷிங் மெஷின் […]
அமெரிக்காவிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளில்லா காரில் பயணம் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். நாட்டில் கொரோனா பரவல் உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஆளில்லா காரில் பயணித்து அகம் மகிழ்வது அவசியமா..? என அமைச்சர் மா.சுப்பிரமணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுநர் இல்லாத கார் குறித்த விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஓட்டுநர் […]
அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் […]
தமிழ்நாட்டில் கொரானா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால், தற்போது மீண்டும் […]

