அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.. […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் நாளை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருப்புவனத்தில் போராட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம்.. அனுமதி கொடுத்துவிட்டனர்.. நாளை ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்த பின்னர், நள்ளிரவில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதுவரை நடந்த எல்லா போராட்டத்திற்கும் நாங்கள் அனுமதி […]

தமிழக வருவாய்த் துறை பட்டா மாறுதல் உட்பட இன்னும் பல சேவைகளை மிகவும் சுலபமாக்கி பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அரசு. ஆன்லைனில் நீங்க பட்டா மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே படித்து பார்த்து அறிந்துகொள்ளலாம். முன்னர், பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால் பொதுசேவை மையம் அல்லது சார்பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, பொதுமக்கள் https://tamilnilam.tn.gov.in/citizen/ […]

தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை அலங்காநல்லூரில், அப்பாவுக்கு பதிலாக மகன்களை பிடித்து போலீசார் விசாரித்த மற்றொரு வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று மிரட்டி, அவரது இரண்டு மகன்களையும் போலீசார் காவல் […]

நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். நாமக்​கல் மோக​னூர் சாலை கலை​வாணி நகரைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி​யன்​(55). இவர் திருச்​சி​யில் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​ராகப் பணிபுரிந்து வந்​தார். இவரது மனைவி பிரமிளா (51). மோக​னூர் அரு​கே​யுள்ள ஆண்​டாள்​புரம் அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தார். இவர்​களது மகள் சம்​யுக்தா (25). மகன் ஆதித்யா […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.72,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]