சென்னை தேனாம்பேட்டையில் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டார். சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை பணி முடிந்து பைக் டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றபோது, அந்த பைக் டாக்ஸியை ஓட்டிய நபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை […]

தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை […]

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, […]

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த இரட்டை கொலை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.. இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன்களில் வேல்முருகன் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.. இதில் அருள் ராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கண் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது.. ஆனால் தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. முக்கிய கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை நயினார் நாகேந்திரன் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.. மேலும் ஒவ்வொரு மாதமும் தமிழக பாஜக தரப்பில் மாநாடு நடத்தவும் […]

பிரபல கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி சென்னையில் காலமானார்.. அவருக்கு வயது 87. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன அறங்காவலராக இருந்த இவர் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் வசந்தி தேவி.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, துணைவேந்தராக 1992 முதல் 1998 வரை வசந்தி தேவி இருந்துள்ளார். 2002-2005 வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார். மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்திற்கு […]

தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின் […]