கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேர்ந்த சம்பத் (28), தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது மீட்பு பணிகளில் ஈடுபட நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த  பெண்ணுடன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். […]

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அங்கு படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில்அவரை […]

சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா பிரிந்து சென்ற நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத், மாற்றுத்திறனாளி பெண்ணான உஷா என்பவரை இரண்டாவது திருமணம் […]

செப்டம்பரில் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முக்கியத் தீர்மானமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக […]

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழா நாளான நாளை (ஜூலை 7, 2025) பக்தர்கள் வெள்ளம் பெருகும் நிலையில், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலுக்கு முன்புள்ள கடற்கரையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இணைந்து, […]

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிறு கிழமை என்பதால் குறைவான ஊழியர்கள் மட்டும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் […]