ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது 2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் […]

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, இன்று வரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவில் 2223 கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் […]

ஒரு சொத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த சொத்தின் உரிமை கிடைக்காது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பதிவு ஆவணங்கள் வெறும் கூடுதல் ஆதாரமாகவே பார்க்கப்படும் என்றும், உரிமையை நிலைநாட்ட, அனைத்து சட்டபூர்வ ஆவணங்களும் இருந்தாலே தான் உரிமை உரியவரிடம் இருப்பதாக கருதலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான உரிமைக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்: அதேபோல் ஆவணங்கள் அனைத்தையும் அரசு அலுவலகத்தில் கொடுத்து, சொத்தின் உரிமை பற்றிய […]

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது […]

ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]

பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]