குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணையின்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. குரூப் 4 தேர்வும் ஜுலை மாதம் குரூப் 4 தேர்வு ஜுலை […]

மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மத்திய அரசின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு சார்பில் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு தடை விதித்துள்ளது. மாநில அரசு சார்பில் இனி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படாது. இனி கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் கீழ் பிரசார்பாரதி வாயிலாக இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு […]

எஸ்.பி.ஐ. வங்கி வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளது.. சிறுக சிறுக சேமித்து வைப்பு நிதியில் லாபம் பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வைப்புகளை லாபகரமாக மாற்ற ஒரு வாரத்தில் , இரண்டு முறை வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. ஐ.டி.பி.ஐ. , எஸ் வங்கி , ஆக்சிஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற பல வங்கிகள் வைப்பு நிதி […]

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககும் ரோஜ்கர் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 75,000 பேருக்கு முதல்கட்டமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது அனைவருக்கும் வேலை வழங்கும் திட்டத்தின் […]

ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த விவசாயிக்கு காவல்துறை அதிகாரி உரிய நேரத்தில் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர்ப்பிக்கச்செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் அமராவதி விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் கம்மன் பாலத்தில் விவசாயிகள் வந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.அப்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஹ்மேந்திர வர்மா உரிய நேரத்தில் வந்து அவருக்கு சி.பி.ஆர் […]

மணிப்பூரில் நேற்று இரவு 9.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் மொய்ராங் மாவட்டத்தில் இருந்து 75 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை உயிர் சேதமோ, மற்ற பொருட்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் மையம் மொய்ராங்கிலிருந்து 75 கிமீ கிழக்கு-தென்கிழக்கே பதிவாகியுள்ளது. இந்த […]

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. போக்குவரத்து விதிகளை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், மீறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை […]

வரும் 27 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் இன்று வந்து விட்டாலே மக்களும் மாணவர்கள் என அனைவரும் விடுமுறையை இருப்பது வழக்கமான ஒன்று. ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 27, வியாழன் அன்று விடுமுறை என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இடைநிலைக் கல்வி இயக்குநர் […]

நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே மகாநகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நெஞ்சு வலி ஏற்பட்டு, பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவருடன் வார்டு பாயும் இருந்துள்ளார். பெண் மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனை அறையிலேயே வைத்து இருவரும், அந்த பெண்ணை கூட்டு பாலியல் […]

பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறுகையில், ”தற்போது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதனால், இப்போதைக்கு தானியங்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், மத்திய அரசிடம் 2.50 லட்சம் டன் வெங்காயமும் இருப்பு உள்ளது. இதையடுத்து, […]