தமிழக அரசு அண்மையில் வழங்கிய ரூ.2,000 கோடைக்கால சிறப்புத் தொகை தொடர்பாக, தற்போது ஒரு புதிய அரசியல் நகர்வு கோட்டை வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, தகுதி இருந்தும் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதி சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மக்கள் அதிருப்தியை சரிசெய்யும் பொருட்டு, விடுபட்டவர்களுக்கும் அந்தத் தொகையை வழங்க தமிழக அரசு […]

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் இறுதியில் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் தேர்தல் ஆணையம் இதற்கான தேதிகளை அறிவிக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் என 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இந்தச் சூழலில், இதுவரை மௌனம் காத்து வந்த தேமுதிக, மீண்டும் அதிமுக முகாமுக்கே திரும்ப […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் மற்றும் ஆதரவு நிலப்பாடுகள் குறித்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மேற்கு மண்டலமான கொங்கு பகுதியில் அதிமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாமணி நேரில் சந்தித்து […]

கடந்த 2024 மார்ச் மாதம், சுமார் 17 ஆண்டுகாலமாக தான் கட்டிக் காத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்த சரத்குமார், தற்போது அந்த முடிவினால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியை இணைத்த போது அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், தற்போது அவர் நடத்தப்படும் விதமும் பெரும் இடைவெளியை கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். பாஜகவில் இணைந்த பிறகு, தேசிய […]

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த மௌனத்தை உடைத்து, வி.கே.சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார். ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என பொறுமை காத்து வந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் யுத்தம் இப்போதே தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக, மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி என ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக மத்திய பாஜக அரசு ஒரு பிரம்மாண்டமான நிதித் திட்டத்தை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வாக்காளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் […]

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்.பி-யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாணிக்கம் தாகூர், இனிவரும் காலங்களில் எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸிற்குப் பங்கு வேண்டும் என்றும், திமுக […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள், தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கொள்கை ரீதியான விமர்சனங்களை தாண்டி, தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்கள் குறித்துப் பொதுவெளியில் தரம் தாழ்ந்த முறையில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், பொது […]

தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கு தற்போது மெல்ல மெல்ல சரிந்து வருவதன் அடையாளமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த அணிக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த கருப்பூர் சீனி தலைமையில், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் உட்பட 200-க்கும் […]

தமிழக மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி இல்லத்தரசிகளை வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றான ‘நகைக் கடன் தள்ளுபடி’ கோப்பை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட உற்சாகத்தில் இருக்கும் பொதுமக்கள் மத்தியில், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகள் எப்போது வீடு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மக்களின் […]