fbpx

கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ. நியமன சர்ச்சை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உருக்கமாக பேசியுள்ளார்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய …

திமுகவை நாங்கள் சமரசத்திற்கு அழைக்கவில்லை என்றும் நாங்கள் திமுகவோடு சமரசத்திற்கு செல்லவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “அதிமுக வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது அதிமுக …

கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. …

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனறும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ஜூன் 23-க்கு …

”சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை” என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழு – செயற்குழு கூட்டம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பொதுக்குழுவை போலவே முறையாக நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களும் 23 தீர்மானங்களை நிராகரித்தனர். பின்னர் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் …

”தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம். தொண்டர்களின் …

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் …

வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் பற்றி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற …

முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் …

”அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”16வது சட்டப்பேரவையின் நடவடிக்கை குறிப்புகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அதிமுக தரப்பில் கடிதங்கள் வருவதற்கு முன்னரே நீங்களே செய்தியை போட்டுவிடுகிறீர்கள். அதிமுக உட்கட்சி பிரச்சனை ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை …