fbpx

திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவரது தாயார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். …

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட …

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் தொண்டர்களே புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பர் என …

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”4 மாதத்தில் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்தி முடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். …

மத்திய அரசு குறித்து திமுகவினர் செய்தியை பரப்பி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; Khelo India திட்டத்தின்‌ மூலமாக அனைத்து மாநிலங்களிலும்‌ விளையாட்டுவிரர்களை ஊக்குவிக்கவும்‌ விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்‌ மாநில அரசின்‌ திட்டப்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.ஆனால்‌ இந்த …

ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த 3 வழக்குகளில், அவரது வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1995ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறி, அந்த தொகையை, …

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களாட்சியின் ஆணிவேர் …

பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. எனினும் இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டு வந்தது.. பாஜக மீது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.. …

கூடங்குளத்தில் உற்பத்தி ஆகவுள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்சாரத்துறைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கூடங்குளத்தின் 3-வது மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாக உள்ள மின்சாரத்தை …

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விதிகளின்படியே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கடந்த 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் …