fbpx

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்கி …

இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் …

காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரி கரையோர …

சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு,

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு …

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் அலுவலகத்திற்கு சீல்வைத்தனர். பின்னர், சீலை அகற்றக் கோரி …

வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்களா என்று விசாரணை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நியாய விலைக் கடைகள் சரியாக செயல்படவும், உணவு பற்றாக்குறைகளை கலையவும் சரியான அடிப்படை தேவையுள்ள …

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து, தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஜூன் 1 முதல் நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் 24.2 செ.மீ., மழை பதிவாகி …

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் தொடங்கினால் பெருங்குடி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமுமாகும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் …

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை …

’அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்’ என அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “அமலாக்கத்துறை யார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரம் வைத்துள்ளவர்கள் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சரியான தீர்வு கிடைக்கும். …