fbpx

இனி வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கும் வாடகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், …

தமிழ்நாட்டில் அரிசி இருப்பு அதிகமாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”தமிழ்நாட்டில் 17 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. அதை தரமான முறையில் அரைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கும் …

’தமிழ்நாடு மின்சாரத்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான்’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதில், ”அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில் கவிழ்ந்து கிடந்தது மின்துறை ஆகும். மின் மிகை மாநிலம் என்று சொல்லிக் கொண்டு, அநியாய விலைக்கு மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கி மின் துறையை …

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் போற்றி வளர்க்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அறிக்கை வாயிலாகவும், தங்கள் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறை …

உத்தரப்பிரதேசத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பந்தல்கண்ட் அதிவிரைவு சாலையில் நான்கே நாட்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் நகரில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் வகையில், ரூ.14,850 கோடி மதிப்பீட்டில் பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த 17ஆம் …

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் செயல்படவும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து …

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில், 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் 77 இடங்களை வென்று காங்கிரஸ் …

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு பொருட்களின் விலை ரூ.2 …

கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்கப்படுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக எம்.பி வில்சன் கச்சத்தீவு தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக 3 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், முதலாவதாக, “1974 மற்றும் 1976ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை …

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஜி.கே.உலக பள்ளியில் ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் …