fbpx

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இதுவரை 14 …

கனடா காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் …

அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிக்காக மின் துறை கடனில் மூழ்கியிருப்பதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேர்தலில் இலவசத் திட்டங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்கள் பட்ஜெட்டில் இருந்து மட்டுமே நிதியை ஒதுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் …

பாஜக – என்.ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி …

தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட 27 மாநில கட்சிகளின் வருமான வரி தாக்கல் …

”ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை நல்ல பெயரோடு நடத்தி வந்தார்” என நடிகர் பாக்கியராஜ் கூறியுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். …

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ.800 கோடியை பாஜக ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளதாகவும், மாற்று கட்சியை சேர்ந்த 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு …

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 157 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் …

விவசாய நிலங்களை அழித்து தற்போது புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், ஏர்போர்ட் உருவாக்கலாம் ஆனால் விளைநிலத்தை உருவாக்க முடியாது என சாடியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தற்போது புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய …

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டெல்லியில், நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், வழக்கம்போல் வகுப்புவாத விஷத்தை கக்கி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. காட்டிக் கொண்டுள்ளார்.

திருக்குறளில் ஜி.யு. போப் அளித்த மொழிபெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். …