செல்போனில் உணவுத்துறை அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜி.ஆர்.அனில். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும் தனது குழந்தையையும் 2-வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் அளித்திருந்தார். …