fbpx

ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவில் மீண்டும் அர்ஜுன மூர்த்தி இணைந்து கொண்டார். இவர், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர். அதற்காக பாஜகவில் இருந்து விலகி ரஜினிகாந்துடன் ஒட்டிக்கொண்டார். பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் …

இலவசங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தற்போது வந்தாலும் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தில் 2,800 மாணவ-மாணவிகளுக்கு …

நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற உணர்வுடன் சென்னை தினத்தைக் கொண்டாடி வருவதாகத் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2020, 2021, 2022ஆம் ஆண்டுக்கான தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் …

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான ரூபாய் 10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால் குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் …

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரிக்கப்படுகிறது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் …

”இலவசம்” என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், ”இந்த திட்டங்கள் வருமான இடைவெளியைக் குறைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த திட்டங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போது வாதிட்ட வில்சன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் …

தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஒரு வெளியிட்ட அறிக்கையில்; இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றால், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமென்றால், சுற்றுப்புறம் சுகாதாரமாக …

இளைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை CSI மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் …

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அண்மையில் அப்போலோ மருத்துவர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியிருந்தது. …

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் …