முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் …