fbpx

போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக …

தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்..

தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது..இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதை பழக்கம் கொலை, கொள்ளை, …

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டமானது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அடுத்து, பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், …

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்தவில்லை என பால் முகவர் பொன்னுசாமி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”அவர் சங்கத் தலைவரே கிடையாது …

மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் …

”மின்சார சட்டத்திருத்தம் எந்தவித இலவச மின்சாரத்தையும் நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரத தேசத்திற்காக பாடுபட்ட முன்னோர்கள் பற்றியும், தியாகிகள் பற்றியும்
இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற …

வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி குறிப்பில்: காஷ்மீரில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச்சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக்கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் …

ஆன்லைன் ரம்மி குறித்த விளம்பரப் படங்களில் நடிக்காமல் நடிகர்களாக பார்த்து திருந்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் போதை பொருள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்காமல் சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த …

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். …

”மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அழுத்தம் கொடுப்போம்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருட்கள் இல்லாத அளவுக்கு முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் பணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய …