fbpx

சென்னை, அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு பிரிவினரிடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்று பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றாலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் தொடந்து குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இருக்கிறது.…

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் வன்முறையால் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத், எஸ்.பி. பகலவன் ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். …

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

அதிமுகவுக்கு புதிய இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம்..! மேலும் 10 பேர் நீக்கம்..! புதிய அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ்..!

மேலும், அதிமுக துணை …

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, …

ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. …

அடுத்த தேர்தல் எப்போது வரும் என அரசு ஊழியர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் காத்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயலை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் …

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இசை உலகின் ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் இளையராஜா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத், முன்னாள் தடகள வீராங்கனையும் இந்தியாவின் தங்க மங்கை என புகழப்பெற்றவருமான பி.டி.உஷா, தர்மசாலா கோயிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே …

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் போராட்டத்தில் குதித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் …

அதிமுகவில் இருந்து ஓ.பி. ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் இருந்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஓ.பி. ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு …