பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுகவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். …