விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டி கொலை செய்துள்ளார். மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார். திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக […]

திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், அதில் பாமக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் […]

என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி […]

ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, […]

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் […]

விருதுநகர் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரணம் கோரி போராடிய மக்களை விருதுநகர் எஸ்.பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று […]

செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை […]

திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான புகாரில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த நிகழ்வு, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், வழக்கின் தன்மை மற்றும் பரபரப்பைக் கருத்தில் கொண்டு, இது சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற […]