விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்ற காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து […]

2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். […]

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது. சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக […]

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. […]

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி […]

இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழகத்துக்கான […]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு என்பதற்கு, பெயரை தவிர வேறு ஏதாவது அடையாளம் இருக்கா? தமிழே இல்லை எனில் அது எப்படி தமிழ்நாடாகும்.. எங்கள் முன்னோர்களுக்கு இருக்கும் அடையாளம் எங்க? ஒரு இனம், தனது தாய்மொழியில் இறைவனை வழிபட முடியாத நிலை, தனது தாய்மொழியில் வழக்காட முடியாத நிலையை பெற்றிருந்தால் அது அடிமை இனம் என்று […]

தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை பனையூரில் நடக்கும் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது “ தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென ராமதாஸை […]

முதலமைச்சரிடம் ஏன் யாரும் கூட்டணி பற்றி கேட்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எங்கள் பாஜகவை பொறுத்த வரை, அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைத்திந்திய அளவிலான ஆலோசனை நடைபெறும். அதனை பொறுத்து தான் விஜய தாரணிக்கு பொறுப்பு வழங்கப்படும்.” என்று கூறினார். மாநில நிர்வாகிகள் […]

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு […]