தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக நாம் வளர்ந்ததற்கு தொண்டர்களும் மக்களும் தான் காரணம்.. உங்களை நம்பி தான் நானும் நமது கட்சியும் இருக்கிறோம்.. இன்று உங்கள் அனைவருக்கும் தவெக தலைமை தொண்டனான எனது வாழ்த்துகள்.. 1977-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதில் “ அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.. இதனை முன்னிட்டு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் […]

அதிமுக அரசியலில் அதிகாரப் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதிமுகவின் கதவுகள் தனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதையும், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தற்போது மாற்றுப் பாதைகளை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், ஓபிஎஸ்-ஸின் நிழலாக வலம் வந்த அவரது தீவிர ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் விடுத்துள்ள ஒரு […]

புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி […]

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று அதிமுகவில் இணைந்தனர். நகராட்சியின் 26 மற்றும் 27 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், அனீஷ் மற்றும் மைக்கல்ராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

மத்திய பட்ஜெட் 2026-27 தமிழகத்திற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டாவது தமிழகத்தின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒருமுறை ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்’ நடந்து கொண்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார். வரிப்பகிர்வு முதல் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் வரை அனைத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதை அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 விழுக்காட்டிலிருந்து 50 […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, அரசாங்கத்தை வழிநடத்தும் உயர்மட்ட அமைப்புகளின் நிர்வாக செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகளுக்காக இந்த முறை நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் 483.54 கோடி ரூபாயாக இருந்த இந்த ஒதுக்கீடு, தற்போது 620 கோடி ரூபாயாக […]