தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை..
இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விஜய் அதனை மறுத்திருந்தார்.. மேலும் தவெக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது என்றும் விஜய் கூறியிருந்தார்.. மகளிர் தினத்தில் தாலிக்கு தங்கம், மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார்.. விரைவில் தவெகவின் முழு தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். வரும் 28-ம் தேதி சென்னையில் 5 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது..
இந்த நிலையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் நாளை விஜய் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் வேட்பாளர் அறிமுகம் செய்து விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கடந்த 1 மாதமாக தவெக வேட்பாளர் தேர்வு பணி நடந்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் 2 கட்டங்களாக வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தினார்.. இந்த நிலையில் பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.. இது தொடர்பாக இன்று தவெக கட்சி அலுவகத்தில் முக்கிய ஆலோசனையும் நடைபெற உள்ளது.. அதன்பின்னர் இன்று மாலை பனையூரில் வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நாளை வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கான பணிகளை நடந்து வருகிறது.. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிலர் தவெகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது..
Read More : “ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு இபிஎஸ் சென்றுவிட்டார்..” அமைச்சர் சிவசங்கர் பதிலடி..!



