வரலாற்றில் போர் என்பது எப்போதும் நிலத்திற்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ மட்டுமே நடத்தப்பட்டதில்லை. பெரும்பாலும், அவை ஆழமான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன.. பயம், அடிபணிதல் மற்றும் முழுமையான அதிகாரம் போன்ற செய்திகளை வழங்க, போரில் வெற்றி பெற்றவர்கள் சில நேரங்களில் கொல்லப்பட்ட தங்கள் எதிரிகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி கோபுரங்களைக் கட்டி உள்ளனர்.. இந்த கொடூரமான பாரம்பரியம் இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. வரலாற்றின் இந்த […]

பாட்டியாலாவைச் சேர்ந்த மகாராஜா பூபிந்தர் சிங் வெறும் ஒரு மன்னர் மட்டுமல்ல, அவர் தனது வளமான வாழ்க்கை முறை, உணவு மீதான அன்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் அறியப்பட்ட ஒரு மகத்தான ஆளுமை. அவரது பழக்கவழக்கங்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால், அவரைப் பார்க்க வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட ஆச்சரியப்பட்டனர். அவரைப் பற்றிய சில கதைகள் மிகவும் ஆச்சரியமானவை, நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அவை அனைத்தும் உண்மைதான். […]

உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி “உலக மக்கள் தொகை நாள்” (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாக ஏற்படும் சிக்கல்கள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்துசிந்திக்கவும், கலந்துரையாடவும் ஒன்று கூடுகின்றனர். இந்தியா, உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், உலக மக்கள் தொகை […]

இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற போது, நாட்டில் பல மன்னர்கள் இருந்தனர். அந்தத் தருணத்தில், அதிக தங்கம் வைத்திருந்த மன்னர் ஒருவர் இருந்தார். இவரே இந்தியாவின் மிகவும் பணக்கார மன்னர் என்று அரியப்படுகிறார். அவர்தான், ஹைதராபாத் நவாப் மிர்ஜா ஒஸ்மான் அலி கான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்று அழைக்கப்பட்ட ஹைதராபாத்தின் கடைசி நிசாமான மிர் உஸ்மான் அலிகான் சுதந்திர இந்தியாவின் […]

கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி. கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து […]

ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் […]

1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]