ஜோதிடத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகம். திருமணம், மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், காதல், கலை போன்றவற்றுக்கு இது காரணமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மறுபுறம், குருவும் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்தில் மிதுன ராசியில் சேரும்போது, கஜலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. […]

திருப்பதியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் “ திருப்பதி கோயிலில் சில இளைஞர்கள் ரீல்களுக்காக குறும்புத்தனமான செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களை உருவாக்குவது, திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கோவிலின் வளாகத்தில் நடனங்கள், ஆட்சேபனைக்குரிய போஸ் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியிடுகின்றனர். […]

வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று […]

ஏகாதசி என்பது இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான நாளாகும். இந்த நாளில், பக்தர்கள் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு பிரார்த்தனை செய்வார்கள். ஏகாதசி விரதம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நாள். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் இந்த நாளில், பக்தர்கள் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருந்து பிரார்த்தனை செய்வார்கள். ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கும் ஏகாதசி விரத நாட்களைப் பற்றியும், அதன் […]