fbpx

கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு …

மாங்கனி திருவிழாவானது காரைக்காலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை கூறும் விதமாக இம்மாங்கனி திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. இவ்வூரில், காரைக்கால் அம்மையாருக்கென்று ஒரு தனிக்கோவிலானது பாரதியார் சாலையில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெருகிறது.

இதில் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதிக்கும், பரமதத்தனுக்கும் திருமண வைபவம் …

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட …

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் …

இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘HRCE’ எனும் கைபேசி செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய …

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப …

இது இந்துக்களின் முக்கிய ஸ்தலம். தனது ஆயுட்காலத்திற்குள் ஒருமுறையாவது காசி சென்று வர வேண்டுமென்று விரும்புவர். இந்த காசி தலமானது உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் இருபுறங்களில் வாரணா, ஹசி என்ற கங்கை நதிகள் ஓடுவதால் இதற்கு வாரணாசி என்று பெயர் வந்தது. ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் …

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு …

விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார் மற்றும் தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், …

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கு விழா நடந்தது. கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு …