ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது பகவான் கிருஷ்ணரின் திருவுருவச் சிலைகளிலும் படங்களிலும் கையில் புல்லாங்குழலும், கிரீடத்தில் மயில் இறகு அலங்கரிக்கப்படுவது வழக்கம். கிருஷ்ணரின் முதன்மை அடையாளமாக மாறியுள்ள இந்த மயிலிறகின் பின்னணியில் பல ஆன்மீகக் கருத்துகளும் சுவாரசியமான கதைகளும் அடங்கியுள்ளன. மயிலிறகின் பின்னணியில் உள்ள கதைகள்: பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் இசைத்தபோது, அந்த இசையில் மயங்கிய மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடின. இசை நின்றதும், மயில்களின் ராஜா தன் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
ஜோதிடக் கலையின் மூலம் ஒருவரின் எதிர்கால நிகழ்வுகளையும், அவருக்கான தனித்துவமான குணாதிசயங்களையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில், தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய, அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய ஜோதிட ரகசிய குறிப்புகள் இதோ.. நகைச்சுவை உணர்வு: ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் புதன் ஆகிய இரு சுப கிரகங்களும் இணைந்து காணப்பட்டால், அந்த நபருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வும், பேச்சாற்றலும் […]
ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய புண்ணிய காலமான மகாளய பட்சம் தொடங்குவதும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பிறப்பதும் இம்மாதத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுடன் தொடர்ந்து வரும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பெருவிழாக்களுக்கான […]
இந்து தர்மத்தில் துளசி தேவி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றி வழிபடப்படுகிறார். துளசிச் செடியை வீடுகளில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பரிபூரண அருளும், அன்னை மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தடையின்றி முழுமையாகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும். இதன் காரணமாகவே, பல குடும்பங்களில் அதிகாலை வேளையில் துளசி மாடத்திற்குத் தீபமேற்றி, வலம் வந்து வழிபடுவதையும், துளசி தளங்களைப் பறித்துப் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு மாலையாக […]
தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளைப் புகைப்படம் […]
நேபாளத்தில் சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஞ்சோக் பகவதி அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் கசிந்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கவ்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மன்னர் மானதேவா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் நாட்டின் மிக சக்திவாய்ந்த பழமையான சக்தி […]
தமிழக கோயில்களில் இறை தரிசனத்திற்குப் பிறகு வெண்ணிற திருநீறு வழங்குவதே மரபாக உள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக ‘கருஞ்சாம்பல்’ பிரசாதம் வழங்கி உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் (திருச்செங்கோடு அருகே) அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய முருகன் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் தலையாய […]
நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள பணகுடி அருள்மிகு ஸ்ரீ ராமலிங்கசுவாமி திருக்கோயில், ராமாயண வரலாற்று தொடர்புகொண்ட புகழ்பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. பழங்காலத்தில் ‘பாண்டியபுரம்’ என அழைக்கப்பட்ட இவ்வூரின் அருகே, சஞ்சீவி பர்வதத்தை அனுமன் சுமந்து சென்றபோது அதன் துகள்கள் விழுந்து உருவானதாக கருதப்படும் புனித மகேந்திரகிரி மலை அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இலங்கையில் ராவணனை வதம் செய்த பின் நாடு திரும்பிய ஸ்ரீ […]
கடலூர் மாவட்டம், புதுச்சேரி-விழுப்புரம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக சிமெண்ட் பொம்மைகளை செலுத்தும் புகழ்பெற்ற அருள்மிகு அழகு முத்து அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து ஏம்பலம் அல்லது வில்லியனூர் மார்க்கமாக சென்றடையும் வகையில் அமைந்துள்ள இத்திருத்தலம், அதீத ஆன்மீக அதிசயங்களை உள்ளடக்கியது. கோயில் நுழைவு வாயிலில் பிரம்மாண்ட ஆலமரத்தின் நிழலில் கம்பீரமாக வீற்றிருக்கும் அழகு முத்து அய்யனாரின் வலது கையில் உள்ள பிரம்மாண்ட வாளில், […]
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]

