வைணவ திருத்தலங்களுக்கு சென்று வழிபடும்போது ஆகம விதிகளின்படி சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது மன அமைதியையும், முழுமையான இறையருளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கோயில் வாசலிலேயே தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, ராஜகோபுரத்தை தலைநிமிர்ந்து நோக்கி, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கோபுரக் கலசங்களை மனமுருக வணங்க வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பதற்கேற்ப, கோபுரத்தை வணங்கிய பிறகே கோயிலின் உள்பிரகாரத்திற்குள் நுழைய […]

“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது”, “குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக் கூடாது” என்பவை தமிழர்களின் ஆன்மிகப் பண்பாட்டில் காலம் காலமாக வழங்கி வரும் முதுமொழிகளாகும். ஒவ்வொரு குடும்பக் கூட்டமைப்பிலும் தங்களது முன்னோர்களின் நலனுக்காகவும் வம்ச விருத்திக்காகவும் பாடுபட்டு, தியாகம் புரிந்து வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவாகவே குலதெய்வக் கோயில்கள் எழுப்பப்பட்டு பரம்பரை பரம்பரையாக வழிபடப்பட்டு வருகின்றன. ஒரே குலதெய்வத்தை வழிபடும் குடும்பத்தினர் பங்காளி உறவுமுறையைக் கொண்டவர்களாக […]

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் […]

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் […]

மனித வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் தீராத கடன் சுமைகளும் ஒருவரது மன அமைதியை சீர்குலைத்து, நிம்மதியை இழக்க செய்யும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து மீள்வதற்கும், இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை பெறுவதற்கும் ஆன்மீக ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். குறிப்பாக, ஆன்மீக செம்மல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் அருளப்பட்ட எளிய துதிப் […]

தமிழ் பஞ்சாங்கத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட ஒரு மங்கலகரமான மாதமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலமாகவும், தடைகளை தகர்க்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் மாதமாகவும் இது திகழ்கிறது. அத்துடன், காயத்ரி ஜெபம் உள்ளிட்ட இறை வழிபாடுகளுக்கு உகந்த இந்த […]

அமாவாசை என்றாலே நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வழிப்படக்கூடிய ஒரு முக்கியமான நாள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய அமாவாசை தினம், மாதம் மாதம் வந்தாலும் இந்த மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. அது தை மாதத்தில் வருகிற அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசியில் வரும் அமாவாசை ஆகும். இதில் முதலாவதாக வருவது தட்சிணாயன காலமான […]

சிவபெருமானின் வழிபாட்டில் வில்வ இலைகளுக்குதனித்துவமான முக்கியத்துவம் உண்டு. சிவலிங்கத்தின் மீது புனிதமான மூன்று இலைகள் கொண்ட வில்வத்தை படைக்காமல் எந்தவொரு சிவ பூஜையும் முழுமையடையாது என்று கூறப்படுகிறது. இந்த இலைகளின் ஆன்மீக முக்கியத்துவத்தை பக்தர்கள் நன்கு அறிந்திருந்தாலும், வில்வ இலைகளைப் பறிப்பதற்கான சரியான நேரம் குறித்து இந்து சாஸ்திரங்களும் மரபுகளும் சில விதிமுறைகளை வகுத்துள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாகப் பக்தர்கள் புனிதமான ஷ்ராவண மாதத்திலும், சிவபெருமானுக்கு உகந்த பண்டிகை […]

ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே மிக முக்கியமான இடமுண்டு. இவ்வுலகில் பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான நற்குணங்களும் பண்புகளும் உள்ளன. அவ்வகையில், ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மலர்கள் எவை என்பதும், அவற்றிற்குப் பின்னால் அமைந்த சுவாரசியமான புராணப் பின்னணிகளும் நமது வழிபாட்டு முறையோடு ஒன்றிணைந்துள்ளன. இதனாலேயே, ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்த வண்ண மலர்களை கையோடு எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆலயங்களில் வழிபாடு […]

தமிழக அரசியலில் எதிர்காலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும் அவருக்கும் இடையே புதிய அரசியல் போட்டி உருவாகலாம் என அவர் கணித்துள்ளார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நீண்டகாலமாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருபவர் ரத்தன் பண்டிட். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், தற்போதைய […]