ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று ககாமிகஹாராவில் நடைபெற்ற பூல் பி (Pool B) லீக் போட்டியில், போட்டியை நடத்தும் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக, உஸ்பெகிஸ்தானுக்கு […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடரில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இப்போட்டியின் 4-வது ஆட்டமாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, சீனாவின் […]
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக தனது மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அஜித் அகர்கர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதியன்று பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் அக்டோபர் 4-ம் தேதிக்கு பின்னரே, புதிய தலைமைத் தேர்வாளர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கவுகாத்தியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடக்குமுறைகளுக்கு நடுவே ஆண் வேடமிட்டு சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்த ஆப்கான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி (Fariba Hashimi), ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் நகோயா நகருக்கு அருகில் நடைபெற்ற மகளிர்க்கான சாலை சைக்கிள் பந்தயத்தில் (Women’s Road Race), இத்தாலியில் வசித்து வரும் 23 வயதான ஃபரிபா ஹாஷிமி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் […]
இந்தியாவின் முன்னணி பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் 28 ஆண்டுகால பதக்கக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் தனது கடைசிப் போட்டியில் களம் கண்ட மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர் ஒருவர் அணியின் ஆடும் 11 வீரர்கள் பட்டியலை ஒரு பந்தயத் தரகருக்குக் கசியவிட்டதாக வந்த சமீபத்திய செய்திகள் குறித்து அணி நிர்வாகம் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ள அதன் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. ஊழலைச் சற்றும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் கூறியதாக கிரிக்பஸ் செய்தி […]
ஜப்பான் அணியின் அபார பந்துவீச்சால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் நூலிழையில் தப்பித்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக தாமதமானது. இறுதியில், மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை தலா 5 ஓவர்களாக குறைத்து நடத்த தீர்மானித்தனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் […]
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா […]
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வெற்றிகரமாக வழிநடத்தி வந்த நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங், சமீபத்தில் தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். அவரது வழிகாட்டுதலில் சிஎஸ்கே அணி 5 ஐபிஎல் […]
ஜப்பானின் நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான ‘டிரடிஷனல் 60 கிலோ’ மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) பிரிவில் இந்திய வீராங்கனை சுச்சிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் MMA பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவை (Hui Hoon Teo) எதிர்கொண்ட சுச்சிகா, கூடுதல் சுற்றில் […]

