மீல் மேக்கரை அதிகமாக எடுத்து கொள்வதால், ஹார்மோன் சமநிலை மாறி ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்படுகிறது. சோயா பீன்ஸ் சக்கையை வைத்து தயாரிப்பது தான் மீல் மேக்கர். இதில் புரதச்சத்து காணப்படுவதால் பலரும் விரும்பி எடுத்து கொள்கிறனர். இறைச்சிக்கு பதிலாக பிரியாணியில் இதை போட்டு சமைத்து கொடுத்தால் வேண்டாம் என சொல்லாவதவர்களே கிடையாது. இதில் புரதம் அதிகமாக காணப்படுவதால், ருசிக்காக மீல் மேக்கரை […]

டிஃபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ வில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை […]

செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Ernie என்ற மென்பொருளை சீனாவின் பைடு என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சாட்ஜிபிடி அறிமுகமான சில நாட்களிலேயே பல கோடி பயனாளர்களை பெற்று சாதனை படைத்தது. இது இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் கூகுள் இதற்கு போட்டியாக கூகுள் பார்டு-ஐ உருவாக்கியிருக்கியது. கூகுள் மட்டுமின்றி வேறு சில […]

கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்று Barracuda Networks நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மொழி தெரியாதவர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு அர்த்தம் தேவை என்றால் அனைவரும் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இணைய இணைப்புகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிலருடைய தனிப்பட்ட தகவல்களை தேடி வருவதாகவும் அதன் மூலம் அவர்களுடைய வங்கி […]

சுவிட்சர்லாந்து என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது பனி போர்த்த இயற்கையின் அழகு தான். சிலர் சினிமா பாடலில் வரும் சுவிட்சர்லாந்தின் மலைகளின் காட்சிகளைப் பார்த்துக் கண்டிப்பாக ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று நினைப்பர். அவ்வளவு இயற்கை நிறைந்த சுவிட்சர்லாந்தின் ஒரு கிராமத்தில் வந்து வாழ அரசே ரூ.50 லட்சம் வழங்குகிறது. வாலிஸ் மாகாணம் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 4,265 அடி உயரத்தில் அமைந்துள்ளது அல்பினென் என்ற கிராமம். இந்த […]

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை Flipkart APPLIANCES BONANZA விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ், மின்விசிறிகள், சமையல் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மைக்ரோவேவ்ஸ், ஏசி ஆகியவற்றுக்கு ஃப்ளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 4K ஸ்மார்ட் டிவிகள்: இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. குறிப்பாக, 4K ஸ்மார்ட் டிவிகளை […]

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மின்சாரத்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த நிதியாண்டில் மின் துறையில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய்க்கான இழப்பை குறைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் தேர்வர்கள் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்படுத்துபவருக்கும் எஸ்பிஐ வங்கி மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்தவகையில், எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது சாதாரண கிரெடிட் கார்டுக்கான […]

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்திலும், 24,179 ரேஷன் கடைகள் பொது கட்டிடங்களிலும், 7,952 ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வருகிறது. ரேஷன் […]