இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடி கும்பல்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஏழை மக்களுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி காண்யா ஆசீர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் […]

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 8.6 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் முன்பு கடன் பெற்றவர்கள் வங்கியை அணுகி தங்களுடைய வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள முடியும் […]

சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிய சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூராலஜி ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. fetus-in-fetu என்ற மிக மிக அரிய நிகழ்வு காரணமாக இது நடக்கிறது. அதாவது இதில் இரட்டைக் கருக்கள் தாயின் வயிற்றில் […]

கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹூப்பள்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார். 1,507 மீட்டர் நீளமுள்ள இந்த நடைமேடை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

காஸ்மாஸ் வெப் என்ற விண்வெளி ஆய்வினை பற்றிய இணையதளம் ஒன்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகளின் சான்று படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மிகப்பெரிய திட்டமான காஸ்மாஸ் வெப்பிலிருந்து புகைப்படங்கள் முதல் முதலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கே மிகவும் அதிசயமூட்டும் வகையில் நாம் தூரத்திலிருந்து […]

வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி-1ஏ பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி-1சி பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்படவுள்ளது. இதனால், ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு, 29 மாவட்டங்களில் ஏப்ரல் 20ஆம் தேதி காலை […]

தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். மலேரியா காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி உள்ளிட்டவை மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், காரமான உணவுகளை குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று […]

மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கியூட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பலர் விண்ணப்பிக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. 2023இல் கியூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் […]

இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வு தேர்வானோரின் தகுதிப்பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 10ஆம் […]

சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழு மழை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், […]