விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கோடிக்கணக்கான மக்கள் […]

நாட்டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும், அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வகையான வாய்ப்புகளையும் உருவாக்கும் களமாக இந்த திருநாள் திகழ்கிறது. அந்த வகையில், போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எனவே, அதுகுறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம். போனஸ் என்றால் என்ன..? எதற்காக..? ஒரு தலைமுறையால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்றை, […]

Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன. முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஆண்டு பணியமர்த்தல் 30% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும். மார்ச் […]

குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஓர் நிதியாண்டில் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் வருமான வரித்துறையினரால் நாம் கண்காணிக்கப்படுவோம். எனவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளை செய்தோம் என்றால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் அறிக்கை தாக்கல் செய்யும்போது பண பரிவர்த்தனை குறித்து குறிப்பிடவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். நிதி முதலீடுகள், வங்கி இருப்பு, சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு சந்தைகள் என்று […]

ஓய்வூதியதாரர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் உங்களின் ஆவணங்கள் அனைத்தையும் மிக பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதற்காக டிஜி லாக்கர் எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் […]

நவீன உலகம் என்னதான் முன்னேறி இருந்தாலும் இன்றளவும் செல்வந்தர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் பலவும் எளியோர்களால் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கின்றன. அதேசமயம், எளியவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் பலவற்றை ஆடம்பர பொருட்களாக பாவித்து அதனை பல ஆயிரங்களில் விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. அந்த வகையில் Hugo boss என்ற தளத்தில் சாமானியர்கள் அணியும் ஹவாய் செப்பல் என சொல்லக்கூடிய காலணியை 8,990 ரூபாய்-க்கு விற்கப்படுவதாகவும் அதன் உண்மையான விலை 19 […]

பண்டிகை நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனநலனில் கவனம் செலுத்தும்படி வீவொர்க் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வீவொர்க் (WeWork) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த 10 நாள் விடுமுறைகளில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் எனவும், மனநலனை மேம்படுத்துவதற்கு ஏற்ற செயல்களில் ஈடுபடலாம் எனவும் வீவொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி […]

விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர இருக்கிறது. நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு சார்பில் பதிவு எண் வழங்கப்படுகிறது. இந்த எண்களை கொண்டுதான் வாகனங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. இதனால், வாகனத்தின் உரிமையாளர் யார்?, எந்த ஊர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்யப்பட்டது? எந்த ஆண்டு வாகனம் வாங்கப்பட்டது?, என்ஜின் எண், […]

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். காலிப் பணியிடங்கள்: கோயம்புத்தூர் – 233 விழுப்புரம் – 244 விருதுநகர் – 164 புதுக்கோட்டை – 135 நாமக்கல் – 200 செங்கல்பட்டு – 178 ஈரோடு – […]

எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 20 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 15, 2022 முதல் அமலுக்கு வந்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் 3% முதல் 5.85% வரை வட்டி விகிதங்களைப் […]