திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்றிரவு வானில் பறக்கும் ரயில் போவது போன்ற தெரிந்த ஒளியை இளைஞர்கள் வீடியோ எடுத்தனர். சிலர் இதனை வானில் தோன்றும் ஒரு அறிய நிகழ்வு என்று கூறினர். மற்றவர்கள் இது யுஎஃப்ஒ என்று ஆச்சரியப்பட்டனர். சிலர் இதனை ஆத்மாக்களின் அணி வகுப்பு என்றும், இது வேற்று கிரக வாசிகளின் வாகனம் …
உலகம்
WORLD NEWS| Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
40 வயது விதவை பெண்ணின் தலையை வெட்டி தோலை உறித்தெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று முன்தினம் இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு, மார்பகம் துண்டிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி தனது ட்விட்டர் பக்கத்தில் …
அதன்படி அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் யாரெல்லாம் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்ற திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும், விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயனப்டுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் …
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், முக்கிய சுற்றுலாத்தலமான நயாகரா அருவி முற்றிலும் உறைந்து காணப்படுகிறது.
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் நிலவிய பனிப்புயல் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த …
தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர்.…
அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இந்திய தம்பதி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் …
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அப்போது பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியதால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. உடனடியாக தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்ககளில் …
2023ஆம் ஆண்டு உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து நாடுகளின் மொத்த …
BF7 கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் …
ஒரு வயதே ஆன நாய் குட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கயின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ஆஷு மாரசிங். …