fbpx

தனது மகன் மற்றும் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க தாயே , வாடகைத்தாயாக மாறி மகனுக்கு குழந்தையை பெற்றுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் உட்டா பகுதியில் வசித்து வந்தவர்கள் நான்சி ஹாக் குடும்பத்தினர். இவரதுமகன் ஜெஃப் ஹாக். சில ஆண்டுகளுக்கு முன்பு கேம்ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. …

மிக உயரமான பெண் என கின்னசில் சாதனை படைத்த பெண் முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

உலகத்திலேயே மிக உயரமான பெண் 7 அடி உயரத்தில் உள்ளார். ருமேஸ்யா கெல்கி என்ற பெண் துருக்கியின் விமான நிலையத்தில் இருந்து 13 மணி நேரம் பயணம் செய்துள்ளார். 25 வயதே நிரம்பிய அந்த இளம் பெண் …

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. 

பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். …

ஒருவர் காதலில் விழுவதற்கு பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் இருக்கும். அப்படி அவர்கள் காதலில் விழுந்தபிறகு, தங்கள் இணையரை எப்பெடியெல்லாம் வர்ணித்து தங்களது காதலை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்பது, காதலில் விழுவதை விடவும் சுவாரஸ்யமான விஷயமாக மாறிவிடுகிறது. திரைப்படங்களும் கூட காதல் காட்சிகள் மூலம் எக்கச்சக்கமான வர்ணிப்புகளை நமக்கு காணக் கொடுத்துள்ளது. ஆனால், சினிமா காட்சிகளையே மிஞ்சும் …

இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக நிறைமாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற கொடூர சம்பவம் துருக்கி நாட்டில் அரங்கேறியிருக்கிறது.

துருக்கியின் முக்லா என்ற பகுதியில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்குக்கு 41 வயதான ஹகன் அய்சல் என்பவர் தனது 32 வயதான மனைவி செம்ரா அய்சலுடன் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்றிருக்கிறார். அப்போது, …

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர்புதின் சில நாட்களாகவே வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றார். ரஷ்ய உக்ரைன் போர் அதிகரித்து வரும் நிலையில் அவர் ஏதோ உடல் நல பிரச்சனையில் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்தது. தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளை …

குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை …

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரியன் பாப் இசை பாடகர் லீ ஜிகானும் மரணமடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தென்கொரிய தலைநகர் சியோலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர வைத்தது. …

சொந்த வீட்டின் கதவுக்கு தனக்கு பிடித்த கலரில் பெயின்ட் அடித்ததற்காக உரிமையாளருக்கு 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பெர்கில் உள்ள வீட்டு உரிமையாளருக்கு நடந்திருக்கிறது.

ஈடின்பெர்கின் நியூ டவுனில் உள்ள டிரம்மண்ட் பகுதியில் இருக்கிறது மிராண்டா டிக்சன் (48) என்ற பெண்ணின் பரம்பரை வீடு. …

பிடித்தமான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அது டெலிவரியாகும் வரை கண்கொத்தி பாம்பு போல காத்திருக்கும் நிகழ்வு பலருக்கும் நடந்திருக்கும். ஆனால், அவ்வளவு நேரம் காத்திருந்தும் நீங்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு கிட்டவில்லை என்றால் எப்படி இருக்கும்..? அப்படியான சம்பவத்தைதான் பிரிட்டனை சேர்ந்த ட்விட்டர் பயனர் அனுபவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் ஆர்டர் செய்த …