ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஒரு பெரிய பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்தை ஈரான் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு ஈரான் இந்த நடவடிக்கையை […]

அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

உலகில் பரவி வரும் புதிதாக அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 கோவிட் மாறுபாட்டின் 4 அசாதாரண அறிகுறிகள் என்னென்ன? NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்ற புதிய COVID-19 மாறுபாடு, உலகின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. வழக்கமான சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமல்ல; இந்த முறை, வேறொரு அசாதாரண அறிகுறியும் தோன்றுகிறது. ஒமிக்ரானின் இந்த துணை மாறுபாடு மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினாலும், உலகளாவிய கவனத்தை […]

ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ளது. அதன் பரம எதிரிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து அதைத் தாக்கி வருகின்றன, மேலும் முழு மத்திய கிழக்கு நாடுகளும் இந்தத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளன. இந்தப் போர் உலகிற்குப் புதியதாக இருக்கலாம், ஆனால் ஈரானின் வரலாறு போர்களால் நிறைந்துள்ளது. அது தனது இருப்பைப் பாதுகாக்க பல போர்களை நடத்தியது, சில சமயங்களில் படையெடுப்பாளர்களுடனும், சில சமயங்களில் தனது சொந்த மக்களுடனும். ரத்தத்தால் கறைப்பட்ட ஈரானின் […]

ஏமனில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஏமனின் தெற்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், அவசரத் தலையீடு இல்லாவிட்டால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் 3 ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் […]

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் மார் எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளந்து. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். அப்போது, திடீரென, தேவாலயத்திற்குள் உடலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில், குழந்தைகள் உட்பட 25 […]

ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த […]