மகிழ்ச்சி செய்தி…! படிவம் 10 ஏ… தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ மற்றும் 10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய நேரடி வரிகள் வாரியம் 25.04.2024 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படிவம் 10ஏ மற்றும் 10 ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. கடைசியாக நீட்டிக்கப்பட்ட தேதியான 30.09.2023-க்கு அப்பால் இதுபோன்ற படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிவம் 10ஏ மற்றும் படிவம் 10ஏபி- க்கான விண்ணப்பங்கள் வருமான வரித் துறையின் மின்னணு முறையிலான போர்ட்டலில் தாக்கல் செய்யலாம். 07/2024 சுற்றறிக்கையின் முழு விவரத்தை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரபு நாடு To கேரளா - வாக்களிக்க பறந்து வந்த 30,000 பேர்..!

Fri Apr 26 , 2024
கேரளாவில் ஒரே கட்டமாக 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே அரபுநாடுகளில் இருந்து 30,000 பேர் கேரளா திரும்பியுள்ளனர். நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2வது கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த […]

You May Like