மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 30.11.2025-க்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் 2025 ஜனவரி 24 அன்று வெளியிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் சிஆர்ஏ முறை மூலம் தங்களது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 2025 நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். வரிவிலக்கு, பணி விலகல், கட்டாய ஓய்வு பயன்கள் உள்ளிட்ட வசதிகளை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறமுடியும். இத்திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் மீண்டும் தேசிய ஓய்வூதித் திட்டத்திற்கு மாறமுடியும். அவர்கள் அதற்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



