தமிழ்நாட்டில் மத்திய விளையாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீபெரும்பத்தூரிலுள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம் (RGNIYD) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
- தேர்வு கட்டுப்பாட்டாளர் – 1
- நிதி அதிகாரி – 1
- நூலகர் உடன் படிவங்கள் அதிகாரி – 1
- உதவியாளர் – 1
- ஆலோசகர் (நிர்வாகம்) – 1
- ஆலோசகர் (அகாடமிக்ஸ்) – 1
வயது வரம்பு:
- தேர்வு கட்டுப்பாட்டாளர் – 55 வயது வரை
- நிதி அதிகாரி – 57 வயதிற்கு கீழ்
- நூலகர் உடன் படிவங்கள் அதிகாரி- 30 வயது வரை
- உதவியாளர் – 27 வயது வரை
- ஆலோசகர் (நிர்வாகம்) – 62 வயதைக் கடந்திருக்கக்கூடாது
- ஆலோசகர் (அகாடமிக்ஸ்)- 62 வயதைக் கடந்திருக்கக்கூடாது
என்னென்ன தகுதி?
தேர்வு கட்டுப்பாட்டாளர்: ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, 15 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் அல்லது 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் அவசியம். கணினி திறன் கட்டாயம்.
நிதி அதிகாரி: கணக்கு பிரிவில் அதிகாரியாக முன்பு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். நிதி மேலாண்மை தொடர்பான நிபுணத்துவம் அவசியம்.
நூலகர்: நூலக அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது கலை / அறிவியல் / வாணிபம் போன்ற எந்த ஓர் துறையிலும் முதுகலை + இளங்கலை நூலக அறிவியல் பட்டம். கணினி பயன்பாட்டில் அனுபவம் தேவை.
உதவியாளர்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு திறன் அவசியம்.
ஆலோசகர்: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. நிலை 10 ஊதியத்துடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கணினி திறன் கட்டாயம்.
சம்பளம்:
- தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு தேர்வாகும் நபருக்கு ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளம்.
- நிதி அதிகாரி பதவிக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை சம்பளம்.
- நூலகர் பதவிக்கு ரூ.9,300 முதல் ரூ.4,600 வரை சம்பளம்.
- உதவியாளர் பதவிக்கு ரூ.5,200 முதல் 20,200 வரை சம்பளம்.
- ஆலோசகர் பதவிக்கு கடைசியாக பெற்ற ஊதியத்திற்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேரடியாக விண்ணப்பத்தப் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்தடையுமாறு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்தை https://www.rgniyd.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முகவரி:
The Assistant Registrar (Administration)
Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD)
Ministry of Youth Affairs & Sports, Government of India
Bangalore to Chennai Highway, Sriperumbudur – 602 105
Kancheepuram District, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.2025



