தமிழகத்திற்கு ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு 15-வது நிதி ரூ.127.586 கோடி மத்திய அரசு விடுவிப்பு…!

money Central govt modi 2025

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


நடப்பு 2025–26-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. (2901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியது). கடந்த 2024-25-ம் நிதியாண்டிற்காக அசாம் மாநிலத்திற்கு ரூ.214.542 கோடியை விடுவித்துள்ளது. (தகுதியுடைய அனைத்து 2,192 கிராமப் பஞ்சாயத்துகள், 156 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டாரப் பகுதிகள் மற்றும் தகுதியுடைய அனைத்து 27 மாவட்ட பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது)

பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வள அமைச்சகங்களின் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் மானியங்களை விடுவிக்க மத்திய அரசு, மாநிலங்களுக்கு பரிந்துரை செய்து, நிதியமைச்சகத்தின் மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட மானியங்கள், நிதியாண்டில் 2 தவணைகளாக விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பற்ற மானியங்களை, சம்பளம் மற்றும் இதர செலவுகள் தவிர, அரசியல் சாசனத்தின் 11-வது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயன்படுத்தும். தொகுப்பு மானியங்கள், தூய்மைக்கான அடிப்படை சேவைகள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும். இதில் வீட்டுக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மனிதக் கழிவுகள் மற்றும் மலக் கசடுகளை அகற்றுதல், குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக தொகுப்பு மானியங்கள் பயன்படுத்தப்படலாம்.

Vignesh

Next Post

கருத்தடை மாத்திரைகள் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதாம்!. ஆய்வில் அதிர்ச்சி!

Thu Sep 18 , 2025
பெண்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த கருத்தடை மாத்திரைகளை நாடுகின்றனர் . இந்த மாத்திரைகள் நீண்ட காலமாக எளிதான மற்றும் மிகவும் வசதியான கருத்தடை முறையாகக் கருதப்படுகின்றன . இருப்பினும், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது . பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா? என்ற இந்தக் கேள்வி பயமுறுத்துவது மட்டுமல்லாமல் சிந்திக்கத் தூண்டுகிறது . இந்த ஆய்வின் முடிவுகள் […]
birth control pills breast cancer

You May Like