இது தெரியாம போச்சே…! தொழில் தொடங்க ரூ.40,000 மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டம்…!

money2025

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது.


தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ உணவுப்‌ பதப்படுத்தல்‌ வகைப்பாட்டின்‌ கீழ்‌ அடங்கும்‌ பழச்சாறு, காய்கறிகள்‌, பழங்கள்‌, மீன்‌ மற்றும்‌ இறால்‌ கொண்டு செய்யப்படும்‌ ஊறுகாய்‌, வற்றல்‌ தயாரித்தல்‌, அரிசி ஆலை, உலர்‌ மாவு மற்றும்‌ இட்லி, தோசைக்கான ஈரமாவு தயாரித்தல்‌, அப்பளம்‌ தயாரித்தல்‌, உணவு எண்ணெய்‌ பிழிதல்‌, மரச்‌ செக்கு எண்ணெய்‌, கடலை மிட்டாய்‌, முறுக்கு, பேக்கரி பொருட்கள்‌, இனிப்பு மற்றும்‌ கார வகைத்‌ தின்பண்டங்கள்‌ தயாரித்தல்‌, சாம்பார்‌ பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொருட்கள்‌ தயாரித்தல்‌, காப்பிக்‌ கொட்டை அரைத்தல்‌, அரிசி மற்றும்‌ சோளப்‌ பொரி வகைகள்‌, வறுகடலை, சத்து மாவு, பால்‌ பதப்படுத்துதல்‌, தயிர்‌, நெய்‌, பனீர்‌ உள்ளிட்ட பால்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌, பல்லின இறைச்சி வகைகள்‌ பதப்படுத்தல்‌, உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்‌ தயாரித்தல்‌ போன்ற தொழில்களைத்‌ தொடங்கவும்‌ ஏற்கனவே நடத்தப்பட்டு வரும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களை விரிவாக்கம்‌ மற்றும்‌ தொழில்‌நுட்ப மேம்படுத்தல்‌ செய்யவும்‌ பயன்‌ பெறலாம்‌.

திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீத வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

Read More: சூப்பர்..! பட்டாவில் பெயர் சேர்க்க இனி இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

Vignesh

Next Post

உலகையே திரும்பி பார்க்க வைத்த'ஆபரேஷன் சிந்தூர்'!. லோகோவை வடிவமைத்தவர்கள் இவர்கள்தான்!

Wed May 28 , 2025
உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தவர்கள் குறித்த விவரங்கள் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் வழிகாட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7 ஆம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் […]
Operation Sindoor logo

You May Like