தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் 1 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 6 மாத கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்பளமோ ஒன்றரை ஆண்டுகால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், காலணி தொழில்நுட்பத்தில் போஸ்ட் தொழில்நுட்ப பட்டய 1 ஆண்டு கால பயிற்சிக்கு ஏதேனும் ஒரு தொழில்நுட்ப பட்டய தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுமே ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே விடுதி வசதி உண்டு. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வழங்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரின் கைப்பேசி எண்கள் 9677943633 மற்றும் 9677943733 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: தாய்லாந்தும் கம்போடியாவும் ஏன் சண்டையிடுகின்றன? 11 ஆம் நூற்றாண்டின் சிவன் கோயில் தான் காரணமா?