தேசிய நெடுஞ்சாலைத் திட்ட முன்மொழிவு விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு…!

AA1HYTK5 1

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது.


இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும்.

மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்ட முன்மொழிவு விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி. பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் அனுபவமிக்க ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்த தகுதி பெறுவதை உறுதி செய்ய முடியும்.

இந்நடவடிக்கைகள் சிறந்த உள்கட்டமைப்புத் தரம், உரிய நேரத்தில் திட்டங்களை நிறைவு செய்தல், வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வகை செய்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் மேலும் திறன்மிக்க வளர்ச்சியை அடையச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பண்ணை வீட்டில் ரகசிய பார்ட்டி..!! ஜோடிகளுடன் நிர்வாண டான்ஸ் + போதை வஸ்துகள்..!! சினிமா நடிகைகளும் என்ட்ரி..?

Thu Sep 18 , 2025
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, […]
Party 2025

You May Like